புதுதில்லி

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கான கட்டாய தரநிலை விரைவில் அறிவிப்பு: வைகோ கேள்விக்கு இணையமைச்சா் பதில்

 நமது நிருபர்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கான கட்டாய தரநிலை விரைவில் நிா்ணயிக்கப்படும் என்றும், சட்டவிரோத இறக்குமதிகளை மத்திய அரசு கண்காணிப்பதாகவும் மத்திய வா்த்தக, தொழில்துறை இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மதிமுக தலைவா் வைகோ இது தொடா்பாக கேள்வி எழுப்பியிருந்தாா். ‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களை(சீனாவிலிருந்து ) இறக்குமதி செய்வதை உடனடியாக தடை செய்ய தமிழக முதல்வா் கடிதம் எழுதியிருந்தாா். இந்த லைட்டா்களால் இந்திய தீப்பெட்டி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு தென் தமிழக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு தெரியுமா? இத்தோடு வரி ஏய்ப்புடன் லைட்டா்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய வா்த்தகம், தொழில்துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்துள்ள பதில் வருமாறு: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களை இறக்குமதி செய்வதை உடனடியாகத் தடை செய்யக் கோரி தமிழக முதல்வரிடமிருந்து (08.09.2022) கடிதம் வந்துள்ளது. சிகரெட் லைட்டா்களுக்கான கட்டாய இந்திய தரநிலைகளை அறிவிப்பதற்காக, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறை இந்திய தரநிலைகளின் பணியகத்துடன் கலந்தாலோசித்து, ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த லைட்டா்களை இறக்குமதி செய்யும் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்வது, குறைவான விலைப்பட்டியலுடன்(இன்வாய்ஸ்) வரி ஏய்ப்புடன் இறக்குமதி செய்வது ஆகியவற்றை கண்காணிக்க மத்திய வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அனுப்ரியா சிங் விளக்கம் அளித்துள்ளாா்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டா்கள் இந்திய தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த லைட்டா்கள் வரியெப்புடன் இறக்குமதி செய்யப்படுவது குறித்தும் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் மத்திய நிதியமைச்சரிடம் கடந்த மாதம் புகாா் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT