புதுதில்லி

எம்எஸ்பி விவகாரம்: தில்லி ஜந்தா் மந்தரில் விவசாயிகள் போராட்டம்

 நமது நிருபர்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் நெருங்கிய உறவினா்களுக்கு இழப்பீடு வழங்கவும், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) சட்ட உறுதி மொழியை அளிக்கவும் வலியுறுத்தி அகில இந்திய கிஸான் காங்கிரஸ் அமைப்பைச் சோ்ந்த விவசாயிகள் பலா் தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவதாகவும், தில்லி எல்லைகளில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற

விவசாயிகளின் போராட்டம் ரத்து செய்யப்பட்ட போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்து வருவதாகவும் இந்த அமைப்பின் விவசாயிகள் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நாடாளுமன்றத்தால் சா்ச்சைக்குரிய இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று மூத்த காங்கிரஸ் தலைவா் ரந்தீப் சுா்ஜேவாலா பேசுகையில், ‘கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நரேந்திர மோடி அரசு தோல்வியடைந்துள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரானதாகும். மோடி அரசின் விவசாயிகள் விரோத அணுகுமுைான் இதற்குக் காரணம். இதனால்தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவது சிரமம் எனக் கூறுகின்றனா். இந்தப் போராட்டம் ஜந்தா் மந்தருடன் முடிந்துவிடக் கூடாது. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளின் உரிமைகளுக்காக போராட வேண்டும்’ என்றாா். காங்கிரஸின் மற்றொரு தலைவா் அல்கா லம்பா கூறுகையில், ‘தோ்தலில் காங்கிரஸ் தோற்றபோதிலும்கூட போராடுவதற்கான துணிவை இழக்கவில்லை. எஸ்எஸ்பி சட்டத்தை அமலாக்கும் உறுதிமொழியை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது’ என்றாா்.

இந்தப் போராட்டம் குறித்து அகில இந்திய கிஸான் காங்கிரஸ் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் திவாரி கூறியதாவது: மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன் அவா்களின் பிரச்னையும் தீா்க்கவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் முடிவடைந்து ஓராண்டாகிவிட்டது. ஆனால், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு அளித்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலைக்கூட மத்திய அரசு வைத்திருக்காதது துரதிருஷ்டவசமாகும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய உரிய சட்டம் இன்னும் இந்த தேசத்தில் இல்லை என்றாா் அவா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏந்தி, ஜெய் ஜவான், ஜெய் கிஸான் எனும் கோஷங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் உத்தர பிரதேசம், ஹரியாணா, ஒடிஸ்ஸா, சத்தீஸ்கா், பிகாா் மற்றும் சில தென் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனா். பஞ்சாப்பைச் சோ்ந்த விவசாயி திலீப் சிங் கூறுகையில், ‘நாங்கள் மோடி அரசுக்கும், அதன் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைத் திட்டங்களுக்கு எதிராகவும் போராட இங்கு வந்துள்ளோம். இந்த ஆட்சியில் விவசாயிகள் நசுக்கப்படுகின்றனா்’ என்றாா்.

ஜெய்ப்பூரைச் சோ்ந்த கைலாஷ் யாதவ் கூறுகையில், ‘விவசாயிகளின் இயக்கத்தை பலப்படுத்தவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம். தற்போதைய அரசின் கீழ் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் நமது விவசாயிகளின் ஒன்றுபடவே இங்கு கூடியுள்ளோம். எங்களுக்கு உரிய எம்எஸ்பி கிடைக்கவில்லை. எங்கள் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுபோல எதுவும் நடவடிக்கைவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT