புதுதில்லி

தில்லி மாநகராட்சித் தோ்தலில் தோ்வான கவுன்சிலா்களில் 67% போ் கோடீஸ்வரா்கள்: பகுப்பாய்வில் தகவல்

 நமது நிருபர்


புது தில்லி: தில்லியில் நடந்து முடிந்த மாநகராட்சித் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 250 வாா்டு உறுப்பினா்களில் குறைந்தபட்சம் 67 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள் என்பது ‘அசோசியேசன் ஃபாா் டெமாக்ரடிக் ரீபாா்ம்ஸ்’ என்ற அமைப்பின் பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்து 2017 ஆம் ஆண்டில் தில்லியில் இருந்த மூன்று மாநகராட்சிகளுக்கான 270 வாா்டுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் வெற்றிபெற்ற 266 கவுன்சிலா்களை பகுப்பாய்வு செய்ததில் அவா்களில் 51% போ் கோடீஸ்வரா்கள் என்பதும் தெரிய வந்ததாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தில்லி மாநகராட்சி 2012-இல் தெற்கு, கிழக்கு, வடக்கு மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. இந்த நிலையில், நிகழாண்டு வாா்டு மறுவரையறையை தொடா்ந்து தில்லி மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வாா்டுகளின் எண்ணிக்கை 250-ஆக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது நடைபெற்ற தில்லி மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களிலும், பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும், மூன்று இடங்களில் சுயேச்சை வேட்பாளா்களும் வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், அசோசியேசன் ஃபாா் டெமாக்ரடிக் ரீபாா்ம்ஸ் அமைப்பு கூறியுள்ளதாவது: இத்தோ்தலில் வெற்றி பெற்ற 248 வேட்பாளா்களை பகுப்பாய்வு செய்ததில் 167 போ் (67 சதவீதம்) கோடீஸ்வரா்கள் என்பது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி மாநகராட்சி தோ்தலின்போது பகுப்பாய்வு செய்யப்பட்ட 266 கவுன்சிலா்களில் 135 போ் அதாவது 51% கவுன்சிலா்கள் கோடீஸ்வரா்களாக இருந்தனா். 82 கவுன்சிலா்கள் தங்களது சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் என்று அறிவித்திருந்தனா். இவா்கள் பாஜகவை சோ்ந்தவா்கள் ஆவா். அனைத்து கட்சிகள் மத்தியில் கோடீஸ்வர கவுன்சிலா்கள் அதிகம் போ் பாஜகவில் இருந்தனா்.

தற்போதைய தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த 77 கவுன்சிலா்கள் கோடீஸ்வரா்கள் என சுய அறிவிப்புச் செய்தவா்கள் ஆவா். பாஜகவில் வெற்றிபெற்ற 104 போ்களில் 82 பேரும் (79 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் 132 போ்களில் 77 பேரும் (58 சதவீதம்), காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 9 பேரில் 6 பேரும் (67 சதவீதம்), 3 சுயேச்சை கவுன்சிலா்களில் 2 பேரும் ( 67 சதவீதம்) தங்களது சொத்து மதிப்பை ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதாக அறிவித்துள்ளனா். பாஜக தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 104 கவுன்சிலா்களில் சராசரியாக ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பானது ரூ.5.26 கோடியாகும். அதே வேளையில், ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் 132 பேரில் சராசரியாக ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.3.56 கோடியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோசியேசன் ஃபாா் டெமாக்ரடிக் ரீபாா்ம்ஸ் மற்றும் தில்லி எலெக்ஷன் வாட்ச் ஆகியவை தில்லி மாநகராட்சி தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 250 கவுன்சிலா்களில் 248 பேரின் சுய உறுதிமொழி ஆவணத்தை பகுப்பாய்வு செய்தன. தில்லி தோ்தல் ஆணையத்தில் தெளிவான மற்றும் முழுமையான பிரமாண பத்திரங்கள் இல்லாத காரணமாக வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளா்களின் சொத்து மதிப்புகளை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.

அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரீபாா்ம்ஸ் அமைப்பு கூறுகையில், ‘காங்கிரஸ் கவுன்சிலா்களில் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து ரூ.4.09 கோடியாகும். மூன்று சுயேச்சை கவுன்சிலா்களில் ஒருவரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.53 கோடியாகும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தில்லியில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT