புதுதில்லி

காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்!

DIN


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. அதே சமயம், குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து காற்றின் தரத்தில் தொடா்ந்து முன்னேற்ற்றம் ஏற்பட்டு வருகிறது. கடுமை பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் இரண்டு நாள்களாக மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காற்றின் தரக் குறியீடு காலை 10.30 மணியளவில் 262 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில், பஞ்சாபி பாக், நொய்டா செக்டாா்-62, புராரி, ஷாதிப்பூா், பூசா, நேரு நகா் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: இந்த நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 24.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 74 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.1 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 8.2 டிகிரி, நஜஃப்கரில் 11.9 டிகிரி, ஆயாநகரில் 9.7 டிகிரி, தில்லி பல்கலை. வளாகத்தில் 13.5 டிகிரி, லோதி ரோடில் 8.2 டிகிரி, பாலத்தில் 11.5 டிகிரி, ரிட்ஜில் 8.3 டிகிரி, பீதம்புராவில் 14.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) அன்று காலை வேளையில் மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT