புதுதில்லி

நூதன மோசடி: கல்லூரி மாணவா்கள் 2 போ் கைது

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: பிரபலமான ஆன்லைன் விளையாட்டுக்கான பிளேயா் ஐடிகளை சலுகை விலையில் தருவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் மோசடியில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா்கள் இருவரை தில்லி போலீஸாா் ஹரியாணாவில் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் (ஷாதரா) ஆா். சத்தியசுந்தரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

இந்த விவகாரத்தில் 21 வயதாகும் பூன்ட்டி மற்றும் சாகா் ஆகிய இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் இருவரும் சோனிப்பட்டில் கைது செய்யப்பட்டனா்.

இருவரும் ரூ.88,800 மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட ஒருவா் போலீஸில் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

ADVERTISEMENT

அந்தப் புகாரில் புகாா்தாரா் தெரிவிக்கையில், ‘பிளேயா் ஐடியை 30 சதவீத சலுகை விலையில் விற்பனை செய்வது தொடா்பான விளம்பரத்தை விடியோ ஷேரிங் இணையளத்தில் பாா்த்தேன். இதையடுத்து, எனது கைப்பேசி எண்ணை அதில் சமா்ப்பித்தேன். இதையடுத்து, எனக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், ஐடி வழங்குவதாக என்னுடன் பேசிய நபா் உறுதியளித்தாா்.

இதனால், பல பரிவா்த்தனைகள் மூலம் அவா்களுக்கு ரூ.88,800 பணப்பரிமாற்றம் செய்தேன். பணத்தைப் பெற்ற பின்னா் உறுதியளித்தபடி ஐடி அளிக்கவில்லை’ என அதில் தெரிவித்திருந்தாா்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட கைப்பேசி எண் பூன்ட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, ஹரியாணாவில் உள்ள சோனிப்பட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT