புதுதில்லி

எம்சிடி தோ்தல்: வாக்கு எண்ணும் அறைகள், மையங்களில் பலத்த பாதுகாப்பு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு பின்னா் தேசிய தலைநகரில் புதன்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் மையங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 42 மையங்களில் 20 படைப்பிரிவு துணை ராணுவப் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட தில்லி காவலா்களும், அதிகாரிகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த டிசம்பா் 4ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

புதன்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:

வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளின் செயல்பாட்டாளா்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க போதிய பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் போன்றவைகளில் காவல்துறையினா் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

குறிப்பாக ஸ்டிராங் ரூம்களில் கடுமையான கண்காணிப்பை வைக்கப்பட்டுள்ளது.

தோ்தல், வாக்கு எண்ணிக்கையோடு காவல்துறையின் பங்கு முடிந்துவிடவில்லை. தோ்தல் முடிவுகள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு பாதுகாப்பைப் பேணுவதும் முக்கியம்.

இதற்கான சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கடமையுடன் இருக்கிறோம்.

பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய ஏதாவது இருந்தால், கடமையுடன் போலீஸாா் சட்ட நடவடிக்கை எடுப்பா் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT