புதுதில்லி

தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

DIN


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் திங்கள்கிழமை சற்றும் முன்னேற்றம் ஏற்பட்டு கடுமை பிரிவிலிருந்து மிகவும் மோசம் பிரிவுக்கு வந்தது. அதே சயம், குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது.

தில்லியில் காலை வேளையிலும், இரவிலும் பனியின் தாக்கம் உள்ளது. அதிகாலையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 7.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 25.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மற்ற வானிலை நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்து பதிவாகியிருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸ், முங்கேஷ்பூரில் 7.8 டிகிரி, நஜஃப்கரில் 11.8 டிகிரி, ஆயாநகரில் 8 டிகிரி, லோதி ரோடில் 7.4 டிகிரி, பாலத்தில் 10.7 டிகிரி, ரிட்ஜில் 7.9 டிகிரி, பீதம்புராவில் 13.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் அதிகரித்திருந்தது. இதையடுத்து, அன்றைய தினம் மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 407 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. காலை 8.10 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 363 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 6) காலை வேளையில் மிதமான பனி மூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT