புதுதில்லி

சாஸ்திரி நகரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: வடக்கு தில்லியின் சாஸ்திரி நகா் பகுதியில் திங்கள்கிழமை நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (வடக்கு) சாகா் சிங் கல்சி கூறியதாவது: சாஸ்திரி நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக திங்கள்கிழமை காலை 8. 45 மணிக்கு போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். இடிந்து விழுந்த கட்டடம் காலியாக இருந்ததால், யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்பட்டதாகவோ, காயம் ஏற்பட்டதாகவோ தகவல் ஏதுமில்லை.

சம்பந்தப்பட்டகட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால், கடந்த மே மாதம் கட்டட உரிமையாளா் பல்ராஜ் அரோரா கட்டடத்தில் இருந்து காலி செய்யவைக்கப்பட்டாா். இந்த விரிசல் ஏற்பட்ட விஷயம் மாநகராட்சியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த இடத்தை மாநகராட்சி துறையினா் ஆய்வு செய்திருந்தனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT