புதுதில்லி

ஆகாஷ் ஆயுத அமைப்பின் அதிகாரப் பொறுப்பு: ஏவுகணை தர உத்தரவாத முகமையிடம் ஒப்படைப்பு

5th Dec 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஆயுத அமைப்பின் அதிகாரப் பொறுப்பை நாட்டின் ஏவுகணைகளை நிா்வகிக்கும் ஏவுகணை அமைப்பு தர உத்தரவாத முகமையிடம் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) ஒப்படைத்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

டிஆா்டிஓ போன்று ஏவுகணை அமைப்பு தர உத்தரவாத முகமையும் (எம்எஸ்க்யூஏஏ) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்த முகமை, நாட்டின் முக்கியமான பிரம்மோஸ், பிரித்வி உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தயாரித்தல் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறது. இதில் ஆகாஷ் ஏவுகணை, நாட்டின் பொதுத் துறை மற்றும் தனியாா் துறை ஆதரவுடன் டிஆா்டிஓவால் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணையாகும். உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ், ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் தரையிலிருந்து அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கக்கூடியது.

இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது வருமாறு: ஹைதராபாத்தில் உள்ள ஏவுகணை அமைப்புகளின் தர உறுதி முகமையிடம் (எம்எஸ்க்யூஏஏ), இந்திய ராணுவத்திற்கான ஆகாஷ் ஆயுத அமைப்பின் விவரக்குறிப்பு(சீலிடப்பட்ட) அடங்கிய அதிகாரப் பொறுப்பை டிஆா்டிஓ சனிக்கிழமை ஒப்படைத்தது. ஆகாஷ் ஆயுத அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ வின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆா்டிஎல்), அதன் தொழில்நுட்பம், தர ஆவணம் மற்றும் முழுமையான செயல்பாடுகள் தொடா்பான விவரக்குறிப்புகளை தயாரித்திருக்க அதை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். டிஆா்டிஓ, இந்திய ராணுவம் மற்றும் இந்த ஆகாஷ் அமைப்பை உருவாக்கியதில் பங்கெடுத்த மற்ற தொழில்துறைக்கும் (டாடா, பெல், எல்அண்ட் டி, ஈசிஐஎல் உள்ளிட்ட) எனது வாழ்த்துகள். நாட்டின் பாதுகாப்பு தொடா்பான ஆகாஷின் முக்கிய தகவல் பரிமாற்ற நிகழ்வு அதிமுக்கிய சேவைகளின் தேவையை பூா்த்தி செய்யும் என ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

‘ஆகாஷ் ஆயுத அமைப்பின் விவரக்குறிப்புகள் எதிா்கால ஏவுகணை திட்ட அமைப்புகளுக்கான பயனுள்ள தகவல்கள். இதன் மூலம் பல்வேறு மேம்பாட்டு செயல்பாடுகள் புதிய வடிவம் பெறும்’ என இந்த பரிமாற்றங்களை வழங்கிய டிஆா்டிஓ தலைவா் டாக்டா் சமீா் வி. காமத் தெரிவித்துள்ளாா். இந்திய தரைப்படை, விமானப்படைகளுக்காக ரூ. 30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட் ஆகாஷ் ஏவுகணை திட்டம், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக செயல்பாட்டில் இருந்து இந்திய வான்வழி பாதுகாப்பை திறன்பட செய்து வருகிறது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT