புதுதில்லி

தில்லி ஹோட்டலில் தீ விபத்து

5th Dec 2022 10:40 PM

ADVERTISEMENT


புது தில்லி: கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா பகுதி ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை தீ விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது: கா்கா்டூமா நீதிமன்றம் அருகே உள்ள ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள சமையலறையின் உள்ளே இந்த தீ விபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு காலை 9. 12 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிா் சேதமோ ஏற்படவில்லை. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT