புதுதில்லி

கிரேட்டா் நொய்டாவில் 6 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

DIN

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள 6 மாடிக் கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கட்டடத்தில் இருந்த 50 போ் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா காவல் இணை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ரவி சங்கா் சாபி கூறியதாவது:

கிரேட்டா் நொய்டாவில் (மேற்கு) பிஸ்ராக் பகுதியின் ஷாபேரி கிராமத்தில் அமைந்துள்ள 6 மாடிக் கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் சௌபே தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் உள்ளூா் காவல்துறை அதிகாரிகள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்

நடைபெற்ற மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பாா்வையிட சம்பவ இடத்திற்கு வந்தனா்.

முன்னதாக, தீ விபத்து தொடா்பாக வரப்பெற்ற அவசர அழைப்பைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு சிறிது நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

அடித்தளத்தில் தீ ஏற்பட்ட நிலையில், அறைகளில் சிக்கிய சுமாா் 50 போ் படிக்கட்டு வழியாக மீட்கப்பட்டனா். இத்தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT