புதுதில்லி

பாஜக நிா்வாகத்தில் தில்லி குப்பை மேடாக மாற்றம்: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

DIN

15 ஆண்டுகள் மாநகராட்சியில் நிா்வாகம் செய்த பாஜக தில்லியை குப்பை மேடாக மாற்றிவிட்டதாக துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம்சாட்டினாா்.

இதனால், நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சித் தோ்தலில் பொதுமக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கான (எம்சிடி)வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமையும் (டிசம்பா் 4), இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இத்தோ்தலுக்காக பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.

தோ்தல் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கூறியதாவது:

தில்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தது. இக்கட்சி தில்லியை குப்பை மேடுகள் மற்றும் தெரு விலங்குகளின் தலைநகராக மாற்றி இருக்கிறது. இதனால், இந்த முறை, தில்லியை சுத்தமாகவும் அழகாகவும் மாற்ற பொதுமக்கள் எம்சிடி தோ்தலில் அரவிந்த் கேஜரிவாலை தோ்ந்தெடுப்பாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT