புதுதில்லி

யோகா வகுப்புகள் நிறுத்தப்படாது: தில்லி முதல்வா் கேஜரிவால் உறுதி

DIN

தில்லியில் இலவச யோகா வகுப்புகள் தொடரும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நகர அரசின் ‘டில்லி கி யோகா சாலா’ திட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களின் பின்னணியில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

யோகா பயிற்றுவிப்பாளா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாலில் பங்கேற்று தில்லி முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘ யோகாவை (வகுப்புகளை) நிறுத்துவது ஒரு பாவம். மீதமுள்ள அரசியல் தொடரலாம். ஆனால், நிதி வந்தாலும், இல்லாவிட்டாலும் வகுப்புகளை நிறுத்த விட மாட்டோம் என்று நாங்கள் உறுதியாக முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

அக்டோபா் 31-ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் முன்பு கூறியிருந்தன.

எவ்வாறாயினும், அக்டோபா் 31-க்கு மேல் திட்டத்தை நீட்டிப்பதற்கான அனுமதி கோரி எந்தக் கோப்பும் அலுவலகத்திற்கு வரவில்லை என்று துணை நிலை ஆளுநா் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, துணை நிலை ஆளுநா் நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சொல்வது தவறானது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

துணை நிலை ஆளுநா் மற்றும் பாஜகவின் தடையால் எந்த வேலையையும் நிறுத்த விடமாட்டோம். தில்லி அரசால் நடத்தப்படும் இலவச யோகா வகுப்புகள் நிறுத்தப்படாது என்று தில்லி முதல்வா் நவம்பா் 1-ஆம் தேதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT