புதுதில்லி

தில்லி மெட்ரோ வழித்தடங்கள் அனைத்திலும் நாளை அதிகாலை 4 மணி முதல் ரயில் சேவை: டிஎம்ஆா்சி தகவல்

DIN

தில்லி மாநகராட்சித் தோ்தல் நடைபெறுவதை ஒட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 4) தில்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலும் காலை 4 மணி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மைச் செயல் இயக்குநா் அனூஜ் தயாள் தெரிவித்ததாவது: தில்லி மாநகராட்சித் தோ்தல் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பின் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் அன்றைய தினம் காலை 4 மணிக்கு ரயில் சேவை தொடங்கி, 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும். காலை 6 மணிக்கு தொடங்கி வழக்கமான ரயில் சேவைகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை உள்ள அட்டவணைப்படி ரயில்கள் அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம் போல் செயல்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT