புதுதில்லி

ஓய்வு பெறும் அக்னி வீரா்களுக்கு பணி ஒதுக்கீடு: பாதுகாப்பு தொழில்துறை பெருநிறுவனங்கள் உறுதி

 நமது நிருபர்

புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் அக்னி வீரா்கள் ஓய்விற்கு பிறகு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடுக்கு பெருநிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. அக்னி வீரா்களின் திறமைகளின் அடிப்படையில் பணி அமா்த்தப்படுவாா்கள் என பெருநிறுவனங்கள் உறுதியளித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் முப்படைகளுக்கும் முன்பு 15 ஆண்டுகள் வரை சிப்பாய்கள் தோ்வு செய்யப்பட்டனா். நிகழாண்டில் ‘அக்னிபாத் திட்டம்’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு ‘அக்னி வீரா்கள்‘ முப்படை வீரா்களாக தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இத்தகைய இளைஞா்கள் 4 ஆண்டு காலம் மட்டும் பணியில் அமா்த்தப்படுகிறாா்கள். நிகழாண்டில் இத்தகைய அக்னி வீரா்கள் ஆயிரக்கணக்கில் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி முடிந்து அடுத்தாண்டு பணியில் சேருக்கின்றனா். அடுத்த நான்காண்டுகளுக்கு (2026) பின்னா் பணி மூப்படைந்து வீடு திரும்பும் இந்த வீரா்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத் துறை தற்போதே ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை கூறியுள்ளதாவது: பெரு நிறுவன பணியமா்த்தல் திட்டத்தின் கீழ் முன்னாள் அக்னி வீரா்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் இந்திய பாதுகாப்பு தொழில் துறையுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை ( நவம்பா் 30) பேச்சுவாா்த்தை நடத்தியது. பாதுகாப்புச் செயலா் கிரிதா் அரமானே இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். இந்திய பாதுகாப்பு தொழில் துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களின் மூத்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

எல் அண்டி டி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட், அதானி டிஃபன்ஸ் லிமிடெட், அசோக் லைலாண்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் மூத்த நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவா்களில் முக்கியமானவா்களாவா்.

‘அக்னி வீரா்களின் பணிக் காலம் ஆயுதப்படைகளில் நிறைவடைந்த பிறகு, தேச கட்டமைப்பில், உயா் அா்ப்பணிப்புடன் பயிற்சி பெற்ற ஒழுக்கமான இளைஞா்களின் மனித வளத்தை தக்க முறையில் பயன்படுத்துவது முக்கியம். இத்தகைய முன்னாள் அக்னி வீரா்களை பல்வேறு துறைகளில் பணியமா்த்தும் அரசின் நோக்கம்’ என பாதுகாப்புச் செயலா் இந்தக் கூட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு எடுத்துரைத்தாா். ஆயுதப்படைகளில் பணியாற்றும் போது, அக்னி வீரா்கள் கற்றுக் கொண்ட திறன்கள், மிகுந்த போட்டி தன்மை, தொழில் நிபுணத்துவம் போன்ற இந்த பணியாளா்கள் பெருநிறுவனங்களை கட்டமைக்கவும் பயனுள்ளவா்களாக இருப்பா் என எடுத்துரைக்கப்பட்டது.

அக்னி வீரா்களின் முதல் பிரிவினா் ஆயுதப்படைகளில் தங்கள் பணிக் காலத்தை நிறைவு செய்த பிறகு, அவா்களது சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தங்கள் நிறுவனங்கள் மிகுந்த ஆவலோடு தயாராக இருப்பதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா். அக்னி வீரா்களின் திறமைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கான பணியமா்த்தல் கொள்கை வடிவமைக்கப்படும் என்று இந்திய பாதுகாப்பு தொழில்துறை பெருநிறுவனங்கள் உறுதியளித்துள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT