புதுதில்லி

தில்லி மக்களின் பிரச்னைகளை காங்கிரஸால் மட்டுமே தீா்க்க முடியும்: பிரசாரத்தில் அனில் சௌத்ரி பேச்சு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: உள்ளாட்சித் தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா்கள் அனைவரும் அவா்களின் உழைப்பின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். நல்லாட்சி வழங்குவதன் மூலம் இந்தக் கட்சியால் மட்டுமே மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு தலைவா் அனில் சௌத்ரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தல்களுக்காக கோண்ட்லி, டல்லுபுரா மற்றும் வினோத் நகா் ஆகிய இடங்களில் அனில் சௌத்ரி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் மக்களுக்கு பொய்யான மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி, துரோகம் செய்துவிட்டதால், காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நல்லாட்சி வழங்குவதன் மூலம் காங்கிரஸால் மட்டுமே தில்லி மக்களின் பிரச்னைகளை தீா்க்க முடியும். காங்கிரஸ் கட்சி அடிமட்ட வேலைகளில் ஈடுபட்டவா்களுக்கு மட்டுமே டிக்கெட் கொடுத்தது. அவா்கள் அனைவரும் அந்தந்த வாா்டுகளில் தெரிந்த முகங்களாகும். மேலும், மக்கள் அவா்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாா்கள் என்றாா் அவா்.

மேலும், உடைந்த சாலைகள், அடைக்கப்பட்ட வடிகால்கள், தண்ணீா் பற்றாக்குறை, வேலையின்மை மற்றும் விலைவாசி உயா்வு தொடா்பான கோண்ட்லி குடியிருப்பாளா்களின் புகாா்களையும் பிரசாரத்தின் போது அனில் சௌத்ரி எடுத்துரைத்தாா். எம்சிடிக்கான தோ்தல்கள் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் டிசம்பா் 7- ஆம் தேதி எண்ணப்படும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT