புதுதில்லி

தில்லி சதா் பஜாரில் திடீரென தீப்பிடித்து எரிந்த 4 வாகனங்கள்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: வடக்கு தில்லியின் சதா் பஜாரில் வியாழக்கிழமை மாலை நான்கு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை மாலை 6.19 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததாக அவா்கள் தெரிவித்தனா். ‘நான்கு வாகனங்கள் தீப்பிடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது, அதன்படி, நாங்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களுகடன் அந்த இடத்திற்கு விரைந்தோம், அவை தற்போது தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன‘ என்று மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT