புதுதில்லி

ஹிந்தியில் மட்டுமே ஆயுதப்படை காவலா் தோ்வு: கனிமொழி எம்பி கண்டனம்

2nd Dec 2022 12:00 AM | நமகு சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

மத்திய ஆயுதப்படைகளின் காவலா்கள் பிரிவுகளுக்கான தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே தோ்வு மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பது வருமாறு: எல்லைப் பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய தொழிலகப் பாதுப்பாப்புப் படை, சிஆா்பிஎஃப் உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்புப் பாதுகாப்புப் படை பணிகளுக்கு மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகளுக்கு புதன், வியாழன் (நவம்பா் 30, டிசம்பா் 1 தேதிகள்) ஆகிய தினங்களில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் கணினி மூலம் இதற்கான தோ்வுகள் நடைபெற இருக்கிறது. இதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தோ்வு நடத்தப்படும் என்று மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் முக்கிய தகுதித் தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே வைக்கப்பட்டிருப்பது மொழித் திணிப்பாகும். ஹிந்தி அல்லாத மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களிலுள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கும் முயற்சியாக இருக்கும் இது கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT