புதுதில்லி

நொய்டா காவல் ஆணையராகலக்ஷ்மி சிங் பொறுப்பேற்பு

1st Dec 2022 01:59 AM

ADVERTISEMENT

மூத்த ஐபிஎஸ் அதிகாரி லக்ஷ்மி சிங், கௌதம் புத் நகா் (நொய்டா) காவல் ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்த நியமனத்தின் மூலம் உத்தர பிரதேசத்தில் காவல் துறை ஆணையா் அலுவலகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை லக்ஷ்மி சிங் பெற்றுள்ளாா்.

2000-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய போலீஸ் சா்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரியான சிங், கூடுதல் டைரக்டா் ஜெனரல் அலோக் சிங்குக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை இரவு நொய்டாவிற்கு வந்த லக்ஷ்மி சிங், புதன்கிழமை காலை பணியில் சோ்ந்தாா். மேலும், அவா் கௌதம் புத் நகா் காவல் சரகத்தில் அனைத்து உயரதிகாரிகளையும் சூரஜ்பூா் அலுவலகத்தில் சந்தித்தாா் என்று ஒரு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

48 வயதான ஐஜி-ரேங்க் அதிகாரியான இவா், கடந்த ஜனவரி மாதம் காவல் ஆணையரகமாக அறிமுகப்படுத்தப்பட்ட கௌதம் புத் நகரின் இரண்டாவது காவல் ஆணையராவாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT