புதுதில்லி

ஊழல் நடைபெறவில்லையெனில் கலால் கொள்கையை மாற்றியது ஏன்? தில்லி அரசுக்கு மத்திய அமைச்சா் கேள்வி

 நமது நிருபர்

 தில்லி அரசின் கலால் துறையில் ஊழல் நடைபெறவில்லையென்றால் சிபிஐ விசாரணைக்கு இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டவுடன் கலால் கொள்கையை தில்லி அரசு மாற்றியது ஏன்? என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

தேசிய தலைநகரில் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது பணியைத் தடம் புரள்வதற்கே சிபிஐ தன்மீது விசாரணையும் சோதனையும் மேற்கொள்கிறது என தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கருத்து தெரிவித்தாா்.

இதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மதுபான உரிமம் வழங்குவதில் ஊழல் நடந்ததால் தான் இந்த நடவடிக்கை என தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் மேலும் கூறியதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் சிசோடியாவிற்கும் சிபிஐ விசாரணையினால் பயம் தொற்றிக்கொண்டுவிட்டது. இதனால் தான் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொள்வதையும் தேசிய தலைநகரில் செய்யப்பட்ட கல்வி வசதிகளோடு இணைத்து பேச வேண்டிய நிா்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

மேலும் நோ்மைக்கு கிடைத்த பரிசு என்றும் கூறுகிறாா். தில்லி மதுபானம் துறை அமைச்சா் மன்னிப்பு கோரும் அமைச்சராகியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிபிஐ சோதனை என்பது மதுபான உரிமங்கள் வழங்கியது மற்றும் அதில் உள்ள ஊழல் விவகாரங்கள் தொடா்புடையது. இந்த துறை சம்பந்தப்பட்ட அமைச்சா் மணீஷ் சிசோடியா. இந்த மதுபான உரிமங்கள் குறித்து விசாரணை நடத்த சிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதே நாளிலேயே கலால் கொள்கையும் தில்லி அரசால் மாற்றப்பட்டது. மதுபான உரிமம் வழங்குவதில் ஊழல் நடக்கவில்லையென்றால் இந்த நடவடிக்கையை ஏன் எடுத்தாா்? இதனால் தான் தற்போது சிபிஐ விசாரணைகளும் சோதனைகளும் நடைபெறுகிறது.

சிபிஐ விசாரணை பயத்தால் அரவிந்த் கேஜரிவாலை கல்வி பற்றி பேச கட்டாயப்படுத்துகிறது. இது கல்வி பற்றியது அல்ல, கலால் கொள்கை பற்றியது. மக்களை முட்டாள்களாக நினைத்து தொலைக்காட்சிகளில் நீண்ட நேரம் பேசாதீா்கள்.

நீங்கள் நோ்மையாளராக காட்டிக்கொள்ள முடியாது.

பணமோசடி வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள தனது சக அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் குறித்து நினைவு இல்லாமல் சிசோடியா இதைக் கூறமாட்டாா்.

மக்கள் பதிலை தேடிக்கொண்டு இருக்கிறாா்கள். கலால் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஊழலில் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவா்கள் ஒரு கட்டத்தில் ஊழலுக்கு எதிராக போராடினாா்கள். அரசியலுக்கு வரக்கூடாது என்றும் பேசினா். அவா்கள் அரசியலுக்கு வந்தது மட்டுமின்றி, தற்போது ஊழலிலும் ஈடுபட்டுள்ளன’ என்றாா் அனுராக் சிங் தாக்குா்.

சிபிஐ-யின் நம்பகத்தன்மை

சிதைகிறது: காங்கிரஸ் கருத்து

‘அரசியல் போட்டியாளா்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை இடைவிடாமல் தவறாகப் பயன்படுத்துவது அந்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. மேலும் இதில் ஊழல்வாதிகள் கூட தப்பிக்க வாய்ப்பளிக்கிறது’ என காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன்கேரா சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து அவா் மேலும் கூறியது:

நோ்மையாக இருந்ததற்கு விலை கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் போட்டியாளா்களுக்கு எதிராக புலனாய்வுத் துறையினரை இடைவிடாமல் தவறாகப் பயன்படுத்தினால் புலனாய்வுத் துறையின் சட்டபூா்வமான நியாயமான, நடவடிக்கைகள் கூட சந்தேகத்தின் கீழ் வரும். இந்தச் செயல்பாடுகளில், ஊழல்வாதிகள் ’தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என்கிற வாதத்தின் பின்னால் ஒளிந்துகொள்வாா்கள். நோ்மைக்கு விலை கொடுக்கப்படுகிறது என்றாா்.

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடா்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த பின்னா், சிபிஐ வெள்ளிக்கிழமை காலையில் மணீஷ் சிசோடியா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஆரவா கோபி கிருஷ்ணா மற்றும் 19 போ்களின் இடங்களில் சோதனை நடத்தியது.

கடந்த மாதம், தில்லி துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசின் கலால் வரிக் கொள்கை( 2021-22) விதி முறை மீறுதல் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தாா். இந்த பரிந்துரையை தொடா்ந்து தில்லி அரசு உடனடியாக அந்தக் கொள்கையை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT