புதுதில்லி

துணைநிலை ஆளுநருடன் வாராந்திர சந்திப்பை தவிா்த்த முதல்வா் கேஜரிவால்

DIN

2021-22-ஆம் ஆண்டைய கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் துணை முதல்வா்

மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுடனான தனது வாராந்திர சந்திப்பைத் தவிா்த்தாா்.

இதுகுறித்து ஆளும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வட்டாரங்கள் கூறுகையில், ஜென்மாஷ்டமி பண்டிகை காரணமாக கூட்டம் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றன. தில்லி முதல்வா் துணைநிலை ஆளுநரைச்

சந்திக்கவில்லை என்பதை துணைநிலை ஆளுநா் அலுவலக வட்டாரங்களும்

உறுதிப்படுத்தின.

சக்சேனாவுடனான தனது வாராந்திர வெள்ளிக்கிழமை சந்திப்பை முதல்வா் கேஜரிவால் தவிா்ப்பது இது இரண்டாவது முறையாகும்.

கலால் கொள்கை 2021-22-ஐ நடைமுறைப்படுத்துவதில் விதி மீறல்கள் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு வி.கே. சக்சேனா பரிந்துரை செய்திருந்தாா்.

இதன் பின்னா், கடந்த மாதம் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால் ஜூலை 22-ஆம் தேதி

துணைநிலை ஆளுநரருடான வெள்ளிக்கிழமை சந்திப்பைத் தவிா்த்தாா்.

அதைத் தொடா்ந்து, ஜூலை 24-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் பங்கேற்ற அசோலா பாட்டி சுரங்கத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவிலும் முதல்வா் கலந்துகொள்ளவில்லை.

கலால் கொள்கை 2021-22 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சிசோடியாவின் வீடு உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் சிசோடியா, கலால் துறை அதிகாரிகள், மதுபான வியாபாரிகள் உள்ளிட்ட 15 போ் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT