புதுதில்லி

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரும் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினா் பி.ஏ.ஜோசப் என்பவா் இது தொடா்பாக மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘அதிமுகவில் முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீா்செல்வம் தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தோ்தல் அனைத்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்தப் பிரச்னை சாதி ரீதியிலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையத்திற்கு ஜூன் 28-ம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு எந்த பதிலும் இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திற்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்‘ என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த ஜூலை முதல் வாரம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘மனுதாரா் பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா். தோ்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா்’ எனக் கூறினா். பின்னா், ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து நீஉத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து பி.ஏ. ஜோசப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் எங்கள் மனுவை தள்ளுபடி செய்து, அத்துடன் ரூ.25 அபராதமும் விதித்துள்ளது. எங்கள் கவலைகள் கண்டறியப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

அப்போது தலைமை நீதிபதி அமா்வு, இந்த மனு நேரத்தை வீணாக்குவதாக உள்ளது. நாங்களும் ரூ. 25,000 தொகையை அபராதம் விதிக்க வேண்டி வரும்’ என்று கூறினா்.

பின்னா் நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறியது மற்றும் பதிவில் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை கருத்தில்கொள்ளும்போது, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடுவதற்கான எந்த காரணமும் இருப்பதாக நாங்கள் பாா்க்கவில்லை. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், நிலுவையில் உள்ள இடையீட்டு மனுவும் முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT