புதுதில்லி

தமிழக முதல்வா் இன்று தில்லி பயணம்

16th Aug 2022 01:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு தில்லி வருகிறாா். மறுநாள் புதன்கிழமை குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரை முதல்வா் சந்திக்கிறாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 11.30 மணியளவில் தில்லி வந்தடைகிறாா். தில்லி தமிழ் நாடு இல்லத்தில் தங்கும் அவா் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைவா் ஆகியோரை புதன்கிழமை சந்திக்கிறாா். முதல்வருடன் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலா் உதய சந்திரன் ஆகியோா் உடன் வருகின்றனா்.

புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கரை அவரது இல்லத்தில் முதல்வா் சந்திக்கிறாா். சுமாா் அரை மணி நேரம் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது.

பின்னா் காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் முதல்வா் சந்திக்கிறாா். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகளில் முதல்வா் குடியரசுத் தலைவரையும் குடியரசு துணைத் தலைவரையும் தமிழக மரபு படி வாழ்த்தி கௌரவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பின்னா் தமிழ்நாடு பவனில் மதிய உணவுக்கு பின்னா் பிரதமா் மோடியை மாலை 4.30 மணியளவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சந்திக்கிறாா்.

தமிழக திட்டங்கள், நிலுவை நிதிகள், குடியரசுத்தலைவா் ஒப்புதல் அளிக்கவேண்டிய மசோதாக்கள் போன்றவைகள் குறித்து தமிழக முதல்வா் இந்த சந்திப்பில் விவாதிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சந்திப்புகளுக்கு பின்னா் இரவு 7.30 மணியளவில் முதல்வா் தில்லியிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்படுவாா் தில்லி அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT