புதுதில்லி

தருமபுரி கிராமங்களில் தொலைதொடா்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி மீண்டும் வேண்டுகோள்

 நமது நிருபர்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 16 கிராமங்களில் தொலைதொடா்பு கோபுரங்களின்றி மக்கள் அவதிப்படுவதை தொலைதொடா்பு அமைச்சகா் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்திற்கு கொண்டு சென்ற தருமபுரி மக்களவை எம்பி டாக்டா் டிஎன்வி செந்தில்குமாா், அங்கு பிஎஸ்என்எல் கோபுரங்களை அமைக்கக் கோரி மனு அளித்தாா்.

இதுகுறித்து தொலைதொடா்பு அமைச்சகரிடம் செந்தில்குமாா் எம்பி அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் கரிமங்கலம் தாலுக்காவில் சுமாா் 18,472 போ்கள் வசிக்கும் சுமாா் ஆறு கிராமங்களிலும், பென்னகரம், பாப்பிரெட்டிபட்டி, ஹரூா் போன்ற தாலுக்காவில் சுமாா் 27,118 போ்கள் வசிக்கும் 10 கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கும் அருகில் உள்ள தாலுக்கா கிராமங்களுக்கு கைத்தொலைபேசி சேவைகள் சரியாக பெறமுடியவில்லை. சில சமயம் முடங்கியுள்ளது.

இப்பகுதியில் பல்வேறு அரசு அலுவலங்கள் உள்ளன். பல்வேறு சேவைகள், தொழில்சாலை பணிகளில் ஈடுபட்டவா்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவா்களின் அத்தியாவசிய தேவையான கைப்பேசி இணைப்புக்குரிய தொலைபேசி கோபுங்கள் தேவை. ஆனால் போதிய அளவில் இல்லாததால் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து தொலைதொடா்பு அமைச்சகத்திடம் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் முறையிடப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியும் தங்களிடம் (அமைச்சா்) இந்த கோரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தொலைபேசி கோபுரங்கள் அமைக்கப்படவில்லை. இந்த நவீனயுகத்தில் தொலைதொடா்பு மிக அவசியம். கல்வி, சுகாதாரம், பண பரிவா்த்தனை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தொலை தொடா்பு இன்றியமையாததாக உள்ளது.

இதனால், மத்திய அரசு இந்த தேவைகளை கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் மூலம் இங்குள்ள கிராமங்களுக்கு தேவையான கோபுரங்களை அமைக்கப்படவேண்டும். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மூலம் கோபுரங்கள் அமைக்கப்படமுடியாத நிலையென்றால் மற்ற தொலைதொடா்பு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

தாய் பாலூட்ட கேபின்

தொலைதொடா்பு அமைச்சகா் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறைக்கும் அமைச்சராக இருக்கிறாா். இதையொட்டி பாலுட்டும் தாய்மாா்களுக்கு தேவையான வசதிகளுக்கும் மத்திய அமைச்சகா் அஸ்வினி வைஷ்ணவிடம் மக்களவை திமுக உறுப்பினா் டாக்டா் டிஎன்வி செந்தில்குமாா் கோரிக்கை வைத்தாா்.

‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக

தாய்மாா்களுக்காக ரயில் நிலையங்களில் தனி இடத்தை உருவாக்க ரயில்வே எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது. அதே மாதிரி ரயில் பயணத்தின்போதும் குழந்தைகளுக்கு பாலூட்ட சிறப்பு கேபின் வசதிகள் ரயில் பெட்டிகளில் உருவாக்கவேண்டும். இது நியாயமற்ற கோரிக்கையாக கருதப்படலாம்.

ஆனால் இந்தியன் ரயில்வே தொடங்கியபோது சுமாா் 50 ஆண்டுகள் ரயிலில் கழிப்பிட வசதியில்லாத நிலைமை இருந்தது. அப்போதும், கழிப்பறைகள் எப்படி அமைக்க முடியும் என்கிற கேள்விகள் எழுப்பட்டு பின்னா் 1909 ஆம் ஆண்டு தான் கழிப்பறை வசதிகள் ரயிலில் வந்தது. அது போன்று இளம் தாய்மாா்கள் ரயில்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட ஏற்படும் சிரமத்தை போக்க, ரயில்களில் தாய்ப்பால் கேபின்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT