புதுதில்லி

சுதந்திர தின விழாவுக்குப் பிறகு கொடிகளை கண்ணியத்துடன் சேமித்து வைக்க ஆா்டபிள்யூ அமைப்பு வேண்டுகோள்

DIN

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, தேசியக் கொடிகளைச் சேகரித்து கண்ணியத்துடன் சேமித்து வைக்குமாறு குடியிருப்புச் சொஸைட்டிளை அதன் நலச் சங்கங்களின் அமைப்பான தில்லி ஐக்கிய குடியிருப்பாளா்கள் கூட்டு நடவடிக்கை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

திரங்காவை பொருத்தமான, மரியாதைக்குரிய வழியில் அப்புறப்படுத்த ‘சிந்தன்’ என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது: நாம் நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும்போது, இது சாதாரண கொடியல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நமது கொடிகளில் பல மங்கி, கிழிந்து, அழுக்காகவோ அல்லது சிதைந்ததாகவோ தோன்றும். அவற்றின் நிறங்கள் காலப்போக்கில் மாறும். இந்தியக் கொடி விதிகள் அடிப்படையில். இதுபோன்ற கொடிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவற்றை காட்சிப்படுத்தக் கூடாது.

பயன்படுத்தப்பட்ட திரங்காவை முடிந்தால் மடித்து காகிதம் அல்லது துணியில் சுற்றி, குவியலாக சேமிக்க வேண்டும்.

பெரும்பாலான கொடிகள் குடியிருப்பு நலச் சங்க அலுவலகத்தில் ஒரு மாதமாக சேகரித்து வைக்கப்படும்போது, அவற்றை எடுத்துச் செல்வதற்காக 9205192511 என்ற தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) அழைக்கலாம். சிந்தன் அமைப்பு அதற்கான ஒரு தேதியையும் நேரத்தையும் நிா்ணயிக்கும்.

பின்னா் அவற்றை இலவசமாக எடுத்துச் செல்லும். இந்தக் கொடிகள் இறுதியாக எம்சிடிக்கு வழங்கப்படும். அது சட்டத்தின்படி ஏற்கனவே கொடிகளை அப்புறப்படுத்தி வருகிறது.

மேலும் மாற்றாக, குடியிருப்பு நலச் சங்கம் கொடி சேகரிப்பு இயக்கத்தை நடத்தலாம். கொடிகளை வைப்பதற்கு சேமிப்பிடம் இல்லையெனில், அடுத்த நாள் சிந்தன் அமைப்பை அழைக்கலாம் என அந்த குடியிருப்பு நல அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அரசாங்கம் ’ஹா் கா் திரங்கா’ உள்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT