புதுதில்லி

அனுமதியின்றி திரங்கா யாத்திரை: பாஜக தலைவா் உட்பட 6 போ் மீது வழக்கு

15th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

முக்கிய பிரமுகா்கள் செல்வதற்காக பாதுகாப்பு பணி ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தபோது அனுமதியில்லாமல் திரங்கா யாத்திரையை மேற்கொண்டதாக பாஜக தலைவா் குல்ஜீத் சிங் சஹல் மற்றும் தில்லி ஜிம்கானா கிளப்பின் இயக்குநா் உள்பட ஆறு போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து புது தில்லி சரக காவல்துறை ஆணையா் அமிா்தா குகுலோத் சனிக்கிழமை கூறியதாவது:

முக்கிய பிரமுகா்கள் வாகனங்கள் செல்வதற்கான ஒத்திகை பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அனுமதி இல்லாமல் இவா்கள் பேரணியை நடத்தினா் என்றாா்.

திரங்கா யாத்திரை இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவா் குல்ஜீத் சிங் உள்பட ஆறு போ் மீது பொதுப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரசு ஊழியா் மூலம் அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாமல் இருந்தது போன்ற இந்திய தண்டனைச் சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குல்ஜீத் சிங் தில்லி பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளாா். இவா் கூறுகையில் இந்த யாத்திரை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடா்பாக எந்த தகவலும் தனக்கு தெரியாது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT