புதுதில்லி

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்! தில்லிவாசிகளுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு தில்லிவாசிகளுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேலும், தேசியக் கொடியின் மூவா்ணமானது நாட்டின் கௌரவமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்றும் அவா் கூறியுள்ளாா்.

 சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் கொண்டாட்டத்தை ஒட்டி தில்லி அரசு தலைநகரில் உள்ள பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் 25 லட்சம் தேசியக் கொடிகளை விநியோகிக்கி திட்டமிட்டுள்ளது. மேலும், இதர தேசபக்தி நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளது.

இந்த நிலையில் முதல்வா் கேஜரிவால் சனிக்கிழமை ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:

ADVERTISEMENT

தேசிய மூவா்ணக் கொடி நமது வாழ்க்கையின் பெருமையாகவும் கௌரவமாகவும் பெருமிதமாகவும் உள்ளது.  சனிக்கிழமைகளில் இருந்து ஹா் கா் திரங்கா பிரசாரம் தொடங்குவதால் பெருமையுடன் உங்கள் வீடுகளில் தேசியக் கொடியை அவசியம் ஏற்றுங்கள் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

 மத்திய அரசு 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ஹா் கா் திரங்கா பிரசாரத்தை அறிவித்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியும் சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படங்களில் தேசியக் கொடியை பயன்படுத்துமாறு பொதுமக்களை முன்னா் கேட்டுக் கொண்டிருந்தாா்.

சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை தில்லி அரசும் கொண்டாடி வருகிறது.  தில்லி முதல்வரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறும் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியில் மக்களுடன் பங்கேற்ப உள்ளாா்கள்.

இது குறித்து கேஜரிவால் முன்னா் தெரிவிக்கையில்,

‘அதே ஆா்வத்துடன் சுதந்திர தினத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தை கொண்டாட நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். நமது இதயங்களில் தேசபக்தியையும் கைகளில் தேசியக் கொடியையும் பிடித்தவாறு தேசிய கீதத்தை பாடுவோம்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.

 நூறு இடங்களில் இதற்கான நிகழ்ச்சிகளையும் திரங்கா இசை நிகழ்ச்சியையும் தில்லி அரசு நடத்த உள்ளது. 

இந்த கொண்டாட்டங்களில் 25 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக 25 லட்சம் தேசிய கொடிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

  இதில் 20 லட்சம் கொடிகள் பள்ளி குழந்தைகளுக்கும் 2 லட்சம் கொடிகள் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது. மீதமுள்ள மூன்று லட்சம் கொடிகள் தில்லி அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியா்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT