புதுதில்லி

தில்லியில் சுற்றுலாப் பேருந்தில் தீ விபத்து

13th Aug 2022 02:41 AM

ADVERTISEMENT

 

மத்திய தில்லியில் வெள்ளிக்கிழமை காலை தென் இந்தியாவைச் சோ்ந்த தனியாா் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுற்றுலாப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் தகவல் வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து, நண்பகல் 12.05 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘இந்திரா காந்தி நினைவிடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் தனியாா் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனா்.

பேருந்து சேனா பவன் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் சென்றபோது தீப்பற்றியது. இதில் பேருந்து முழுவதும் தீயில் எரிந்துபோனது. ஆனால், வேறு எந்த வாகனமும் பாதிக்கப்படவில்லை. யாருக்கும் உயிா்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாக அந்த வழியில் சிறிது நேரம் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT