புதுதில்லி

டிடிஏ நிதி முறைகேட்டில் 11 போ் மீது எஃப்ஐஆா்: துணை நிலை ஆளுநா் உத்தரவு

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையத்தில்(டிடிஏ) நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடா்பாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்தில் 9 ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட 11 அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தில்லி வளா்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் தில்லி துணைநிலை ஆளுநா் இருக்கிறாா்.

இந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு உள்ளான 9 ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியத்தை நிரந்தரமாக திரும்பப் பெறவும் துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

2013 -ஆம் ஆண்டு நடந்த ஒரு அப்பட்டமான நிதி துஷ்பிரயோகம் விவகாரம் இது. நிதி முறைகேடுகளோடு, குறியீட்டு முறைகள், மத்திய பொதுப்பணித் துறை பணி கையேடு ஆகியவைகள் உள்ளிட்டவை மீறப்பட்டுள்ளது. இந்த நிதி முறைகேடுகளில் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் அப்போதைய நிதி, பொறியியல் உறுப்பினா்கள் உள்ளிட்ட 11 அதிகாரிகள் மீது டிடிஏ தலைவா் என்ற முறையில் துணை நிலை ஆளுநா் எஃப்ஐஆா் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளாா் என ராஜ்நிவாஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஓய்வு பெற்ற ஒன்பது அதிகாரிகளில் ஒரு தலைமைப் பொறியாளா், ஒரு கண்காணிப்புப் பொறியாளா் மற்றும் ஒரு நிா்வாகப் பொறியாளா் ஆகியோரும் அடங்குவா். மற்றவா்கள் நிதி மற்றும் கணக்குத் துறைகளில் பணிபுரிந்தவா்கள்.

‘முழு ஓய்வூதிய பலன்களை நிரந்தரமாக திரும்பப் பெறுதல்‘ குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ டிடிஏ 25 சதவீத தொகையை மட்டுமே பிடிக்க பரிந்துரைத்தது. ஆனால் கடுமையான முறைகேடு மற்றும் கருவூலத்திற்கு இழப்பு‘ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு துணைநிலை ஆளுநா் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT