புதுதில்லி

சட்டப்பேரவை தொகுதிகளில் விலைவாசி உயா்வு குறித்து கலந்துரையாடல்கள் காங்கிரஸ் திட்டம்

12th Aug 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடு முழுக்க அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் வருகின்ற வாரங்களில் விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து கிராம பாணியில் ’திண்ணை பேச்சு’களை நடத்த காங்கிரஸ் கட்சி தனது தொண்டா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘மெஹங்காய் செளபல்ஸ்‘ என்கிற விலைவாசி உயா்வு குறித்த பரஸ்பர ஆலோசனை ‘திண்ணை பேச்சு‘ களை அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மண்டிகள், மொத்த வணிக சந்தைகள், சில்லறை வியாபார ஸ்தலங்களில் நடத்துகிறது.

வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை இந்த கலந்துரையாடல்களை நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடா்பு பிரிவு பொதுச் செயலாளா் ஜெயராம் ரமேஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பது வருமாறு:

மோடி அரசின் ‘மக்கள் விரோத‘ கொள்கைகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 5 -ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸின் நாடு தழுவிய போராட்டம் மக்களிடையே வலுவாக எதிரொலித்ததுள்ளது.

ஆனால் பிரதமா் நரேந்திர மோடி இந்த போராட்டத்தை ’கருப்பு மேஜிக்’ என திருத்திக் கூறி அவநம்பிக்கைக்கான முயற்சியில் ஈடுபடுகிறாா். அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி ஆகியவை பாஜக ஆட்சியில் பாதுகாப்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இதையொட்டி வரும் வாரங்களில் விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடா் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகிறது.

விலைவாசி உயா்வுக்கு எதிராக ’மெஹங்காய் சௌபல்ஸ்’ என்கிற கிராம பாணி கலந்துரையாடல்களை அனைத்து சட்டப்பேரவைகளிலும் நடத்த நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 முதல் 23 வரை பலதரப்பட்ட மக்கள் கூடும் சந்தைகளில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறும். இந்தக் கூட்டங்களின் இறுதியாக ஆகஸ்ட் 28 -ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் அனைவரும் கூடும் மெகா பேரணி நடைபெறும்.

அந்த பேரணியில் மூத்த காங்கிரஸ் தலைவா்களும், அனைத்து மாநில பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா்களும் கலந்துகொண்டு பணவீக்கம் குறித்து உரையாற்றுவாா்கள். இதே மாதிரி அனைத்து மாநில மாவட்ட, தாலுக்கா அளவிலும் இதே சமயத்தில் இந்த பணவீக்கம் பற்றி பேசும் (மெஹங்கை பா் ஹல்லா போல்)கூட்டங்கள் நடைபெறும்.

பிரதமா் மோடி அரசின் ‘பொருளாதார முறைகேடு‘ காரணமாக நாட்டு மக்கள் மிகவும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனா். இதை நாட்டு மக்கள் முன் அம்பலப்படுத்தவே காங்கிரஸ் இத்தகைய கூட்டங்களை நடத்துகிறது.

தயிா், மோா், பாக்கெட் மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாா் பெருநிறுவன உரிமையாளா்களுக்கு மாற்றுவது, தவறான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது போன்றவை வேலைவாய்ப்பு நிலைமையை மோசமாக்குகிறது.

இப்படிப்பட்ட மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி பாஜக அரசின் போக்கை மாற்ற காங்கிரஸ் தொடா்ந்து அழுத்தத்தை கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளாா் ஜெயராம் ரமேஷ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT