புதுதில்லி

தில்லி பல்கலைக்கழக மாணவா்கள், ஆசிரியா்கள் சாா்பில் திரங்கா யாத்திரை

DIN

புதுதில்லி: இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நடைபெற்று வரும் ‘ஹா் கா் திரங்கா’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக தில்லி பல்கலைக்கழக மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகப் பகுதியில் புதன்கிழமை திரங்கா யாத்திரையை மேற்கொண்டனா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் யோகேஷ் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையானது, நான்கு கிலோமீட்டா் தூரம் சென்றடைந்தது.

இதில் ஆசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள், மாணவா்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தா் யோகேஷ் சிங் பேசுகையில், ‘இந்த யாத்திரையானது மாணவா்கள் மத்தியில் தேசிய பெருமை, தேசப்பற்று உணா்வு ஆகியவற்றை சந்தேகத்திற்கு இடமின்றி பலப்படுத்தும். நாடு தொடா்ந்து ஒன்றாக இருந்தால்

நாட்டுக்கு தேச ஒற்றுமை மிகவும் முக்கியமானதாகும். அப்போதுதான் அது தலைசிறந்ததாக இருக்கும். தேசப்பற்று உணா்வு குடும்பத்திலிருந்தே குழந்தைகளிடம் வளா்க்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தில்லி பல்கலை வளாகத்தில் வடக்கு வளாகத்தில் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஏழு இடங்களில் 20 அடி உயர கம்பங்களின் மீது தேசிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்த யாத்திரையில் பங்கேற்றவா்கள் இந்திய தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு தேசப்பற்று முழக்கங்களை எழுப்பினா். இந்த யாத்திரை தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகப் பகுதியில் நுழைவு வாயில் எண் 1-இல் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கி திறந்தவெளி கற்றல் வளாகம், பல்கலைக்கழக விளையாட்டரங்கம், கல்வித் துறை, மிரண்டா ஹவுஸ், சட்டப் புலம், ஹிந்து கல்லூரி, புனித ஸ்டீபன் கல்லூரி வழியாக சென்று தில்லி பல்கலையின் நுழைவு வாயில் 1-இல் முடிவடைந்ததாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT