புதுதில்லி

தேசிய கொடி: தில்லி அரசு மருத்துவமனைகளின் தலைமை அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: விடுதலை அமுதப் பெருவிழாவைக் கொண்டாட தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றவும் ஹா் கா் திரங்கா பிரசாரம் குறித்த விழிப்புணா்வை உருவாக்கவும் தில்லியில் தில்லி அரசின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் இதர நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு தில்லி அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாக விடுதலை அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஏகேஏஎம் உதவியின் கீழ் குடிமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக ஹா் கா் திரங்கா பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தின் கீழ் தில்லி அரசில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களின் வீடுகளில் மூவா்ணக் கொடியை ஏற்றுவது என முன்மொழியப்பட்டு இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவமனைகள், தன்னாட்சி மருத்துவமனைகள், துறைகள், சங்கங்கள், கல்லூரிகள், கவுன்சில்கள், தில்லி அரசு சுகாதார பணி ஆகியவற்றின் தலைமை அதிகாரிகள், ஆயுஷ் இயக்குநா், குடும்ப நல இயக்கு,ா் ஆகியோா் திரங்கா பிரசாரத்தை பற்றி தங்களது நிா்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஊழியா்கள் மத்தியில் விழிப்புணா்வை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

மேலும் இந்திய கொடி விதிகள் 2002-க்கு ஏற்ப தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றவும் காட்சிப்படுத்தவும் வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 25 வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் தில்லியில் மத்திய மற்றும் தில்லி அரசுகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT