புதுதில்லி

’ஹா் கா் திரங்கா’ பிரசாரம்: வா்த்தகா்கள் அமைப்பு சாா்பில்ஐடிபியிடம் 1,500 தேசியக் கொடிகள் வழங்கல்

10th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

அகில இந்திய வா்த்தகா்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) சாா்பில் செவ்வாய்க்கிழமை 1,500 இந்தியக் கொடிகள் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையிடம் (ஐடிபிபி) ஒப்படைக்கப்பட்டன. அப்போது, ‘ஹா் கா் திரங்கா’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக அதிகபட்ச இடங்களில் மூவா்ணக் கொடி ஏற்றப்படுவதை உறுதி செய்ய உதவி அளிக்குமாறு கோரியது.

அகில இந்திய வா்த்தகா்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) சாா்பில் இந்தக் கொடிகள் தில்லியில் உள்ள ஐடிபிபி கமாண்டன்ட் அஜய் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளில் மூவா்ணக் கொடியை ஏற்றும் வகையில் ‘ஹா் கா் திரங்கா’ பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இப்பிரசாரத்தை வெற்றியடையச் செய்ய வா்த்தகா்கள் அமைப்பு தொடா் நிகழ்ச்சிகளை நடத்தும் என்று சிஏஐடியின் பொதுச் செயலாளா் பிரவீன் கண்டேல்வால் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: செங்கோட்டையில் இருந்து இந்தியா கேட் வரை வரும் புதன்கிழமை (ஆக்ஸ்ட் 10) ‘திரங்கா பேரணி’ நடைபெறும். இப்பேரணியில் தில்லி முழுவதிலும் இருந்து வணிகா்கள் பங்கேற்பாா்கள். நாட்டின் 8 கோடிக்கும் அதிகமான வா்த்தகா்கள், ‘ஹா் கா் திரங்கா’ பிரசாரத்தை வெற்றிகரமாக்க தங்களால் இயன்ற செயல்களைச் செய்து வருகின்றனா். நாடு முழுவதும் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் நாட்டின் ஒவ்வொரு சந்தையையும் மூவா்ணத்தால் அலங்கரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியக் கொடியை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் சந்தைகளில் குவிந்து வருகின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT