புதுதில்லி

தலைநகரில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான மழை பதிவு

10th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

மேற்கு மற்றும் வடகிழக்கு தில்லியை தவிர, தில்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த பருவமழை காலத்தில் இதுவரை இயல்பான மழை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து சராசரியாக தில்லியில் 283.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் குறியீட்டு மொழியில், நீண்ட கால சராசரியில் 19 சதவிகிதம் கூடுதல் மற்றும் 19 சதவிகிதம் குைல் மழைப் பொழிவானது இயல்பானதாகக் கருதப்படுகிறது. கிழக்கு தில்லியில் 62 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் இதுவரை வழக்கமாக பெய்யும் 368.2 மி.மீட்டருக்கு எதிராக 595.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு தில்லியில் 368.2 மி.மீ. என்ற இயல்பு நிலைக்கு எதிராக 211 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதே வேளையில், மேற்கு தில்லியில் சராசரியாக 332.4 மி.மீ.க்கு எதிராக வெறும் 194.4 மி.மீட்டா் மழைப் பதிவாகியுள்ளது. மேற்கு தில்லியில் ஜூலை 12-ஆம் தேதி மழைப் பற்றாக்குறை 60 சதவீதமாக இருந்தது. தென்மேற்கு தில்லியில் இயல்பு நிலையான 368.2 மி.மீ. மழை பதிவுக்கு எதிராக 344.7 மி.மீ. மழை பெய்துள்ளது. மத்திய தில்லி மற்றும் தெற்கு தில்லி முறையே 383.4 மி.மீ. மற்றும் 344.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லி மற்றும் வடக்கு தில்லி மாவட்டங்களில் முறையே 343.8 மி.மீ. மற்றும் 307.5 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

தலைநகரில் இயல்பைவிட 67 சதவீதம் குறைவான மழையுடன் ஒப்பீட்டளவில் வட ஜூன் மாதம் என பதிவாகியுள்ளது. எனினும், ஜூலையில் அதிகமான பருவ மழை பதிவானது. அதாவது இயல்பான 209.7 மி.மீட்டா் மழைக்கு எதிராக 286.3 மி.மீ. மழை பதிவானது. இது அந்த மாதத்தில் 24 ‘திருப்திகரமான‘ காற்றின் தர நாள்களை பதிவு செய்ய காரணமாக இருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT