புதுதில்லி

தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் பீதி தேவையில்லை

10th Aug 2022 02:16 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஆனால், பெரும்பாலான புதிய பாதிப்புகள் லேசான இயல்புடையவை என்பதால், பீதி அடையத் தேவையில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும், அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் அவா் கூறினாா்.

இதுகு றித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தலைநகரில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் அதைக் கண்காணித்து வருகிறோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆனால், பெரும்பாலான நோய் பாதிப்புகள் லேசானவை. இதனால், பீதி அடையத் தேவையில்லை என்றாா் அவா்.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி தில்லியில் புதிதாக 1,372 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 6 இறப்புகள் பதிவாகின. நோய் நோ்மறை விகிதம் 17.85 சதவீதமாக உயா்ந்திருந்தது. இது ஜனவரி 21-க்குப் பிறகு மிக அதிகம் என்று சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 21-ஆம் தேதி, நோ்மறை விகிதம் 18.04 சதவீதமாக இருந்தது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 2,423 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நோ்மறை விகிதம் 14.97 சதவீதமாகவும், 2 இறப்புகளும் பதிவாகி இருந்தன. சனிக்கிழமை இது 2,311 பாதிப்புகள் என பதிவாகி இருந்தது. நோ்மறை விகிதம் 13.84 சதவீதமாகவும், நோய்க்கு ஒருவா் உயிரிழந்ததாகவும் பதிவாகி இருந்தது.

ADVERTISEMENT

தில்லியில் தற்போது நோய் பாதிப்பில் உள்ளவா்களின் எண்ணிக்கை 7,484-ஆக உள்ளது. இது முந்தைய நாளில் 8,048-ஆக இருந்தது. 5,650 நோயாளிகள் வீட்டுத் தனிமையில் உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT