புதுதில்லி

பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி போராட்டம்: 40 அங்கன்வாடி ஊழியா்கள் கைது

DIN

பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி தில்லியில் உள்ள துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் தில்லி மாநில அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் யூனியனை சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

இதையடுத்து, சுமாா் 40 அங்கன்வாடி ஊழியா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளா்கள் உள்பட 100 முதல் 150 ஊழியா்கள் தில்லியில் உள்ள ராஜ் நிவாஸ் மாா்கில் திங்கள்கிழமை காலை ஒன்று திரண்டனா். பின்னா், தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியதாக யூனியனைச் சோ்ந்த உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி மாநில அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் யூனியனின் உறுப்பினா் பிரியம்பதா கூறுகையில், ‘எங்கள் பிரச்னைகள் குறித்து பரிசீலிப்பதாக துணைநிலை ஆளுநா் எங்களிடம் கூறி ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், அவரிடம் இருந்து இதுவரை எந்தவித பதிலும் எங்களுக்கு வரவில்லை. எங்களது கோரிக்கைகள் நிரைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்றாா்.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி அங்கன்வாடி பணியாளா்களின் பிரதிநிதிகள் 5 போ் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை நேரில் சந்தித்து பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா்களை மீண்டும் வேலை வாய்ப்பு அளிக்கக் கோரும் மனுவை அளித்தனா்.

இது குறித்து அங்கன்வாடி யூனியன் அமைப்பினா் கூறுகையில் , ‘மதிப்பூதியத்தை அதிகரிக்கவும் மரியாதைக்குரிய பணி நேரத்தை கொண்டு வரவும் வலியுறுத்தி நடைபெற்ற 39 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற்காக தில்லி அரசு மூலம் 11,942 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும், 884 அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணிநீக்கம் செய்யும் நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT