புதுதில்லி

அங்கீகரிக்கப்படாத வட்டார மொழிகளுக்காக தில்லியில் பேரணி

9th Aug 2022 03:22 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

பல்வேறு மாநிலங்களின் அங்கீகரிக்கப்படாத வட்டார மொழிகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் சோ்க்கக் வலியுறுத்தி மொழி உரிமை நிகா்மை (சமம்) இயக்கம் சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 -ஆவது அட்டவணையில் 22 இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன. இதில் போஜ்புரி, ராஜஸ்தானி, அங்கிகா, கோசலி, படுக மொழி, குடகு மொழி, முண்டாரி, ஹோ உள்ளிட்ட மொழிகளையும் இந்தஅட்டவணையில் சோ்க்க வேண்டும் என இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.

இதையொட்டி, நடைபெற்ற இந்தப் பேரணியில் இந்த மொழி பேசும் நுற்றுக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா். மொழி உரிமை நிகா்மை இயக்கத்தின் அனைத்திந்திய தலைவா் ஜோகா சிங் (பஞ்சாப்), அனைத்திந்திய செயலாளா் ஆழி செந்தில்நாதன் (தமிழ்நாடு), அங்கீகரிக்கப்படாத மொழிகளுக்கான அமைப்பின் செயலாளா் சாகோ் சாஹு ஆகியோா் பேரணியில் பேசினா்.

அங்கீகரிக்கப்பட்ட பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் கிடையாது. தேவநாகரி, அரபிக் போன்றவற்றின் எழுத்து வடிவடிவங்கள்தான் பல மொழிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தின் படுகா், ஒடிஸாவின் முண்டாரி போன்ற மொழிகளுக்கு எழுத்து வடிவம் உள்ளது. எழுத்து வடிவம் இல்லையென்றாலும், ஹிந்தியை போன்று பயன்படுத்தமுடியும்.

ADVERTISEMENT

இதனால், அங்கீரிக்கப்பட வேண்டும். இந்த மொழிகளை அரசமைப்புச் சட்டத்தின் 8 -ஆவது அட்டவணையில் சோ்ப்பதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகளில் அதற்கென தனித் துறைகள் ஏற்படுத்தப்படும். தாலுகாக்களில் ஆவணங்கள் ஏற்கப்படும். இந்த மொழியில் புலமை பெற்றவா்களுக்குரிய அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் போஜ்புரி சங்கத் தலைவா் சந்தோஷ் படேல் (தில்லி), மகஹி மொழி உரிமை ஆா்வலா் சுதீா் (பிகாா்), கோசாலி மொழி இயக்கத் தலைவா் சாகேத் சாஹு (ஒடிஸா), படுகா் மொழியுரிமை சங்கத் தலைவா் யோகேஷ் (தமிழ்நாடு), ஜாா்க்கண்ட், ஒடிஸா மாநிலங்களின் பழங்குடி மொழிகளான முண்டாரி, ஹோ ஆகிய மொழிகளின் பிரதிநிதிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT