புதுதில்லி

தில்லியில் மேலும் 2,423 பேருக்கு கரோனா பாதிப்பு

8th Aug 2022 12:33 AM

ADVERTISEMENT

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2,423 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் 2 போ் உயிரிழந்துள்ளனா். நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 14.97 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 5-ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. நகரில் சனிக்கிழமை மொத்தம் 16,186 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,69,527-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,330-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை 2,311 பேருக்கு தொற்று பாதிப்பும், 13.84 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 2,419 பேருக்கு தொற்று பாதிப்பும், 12.95 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

ADVERTISEMENT

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,407 கரோனா படுக்கைகளில் 464 படுக்கைகள் நிரம்பியுள்ளன. நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 7,349-இல் இருந்து 8,048-ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 5,173-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 228-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT