புதுதில்லி

கொல்கத்தா பெண் நொய்டாவில் பாலியல் பலாத்காா்

DIN

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவில் கொல்கத்தாவைச் சோ்ந்த 27 வயது பெண் ஒருவா் கிளப்பில் நட்பு கொண்ட ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: ஒரு நிறுவனத்தின் மாா்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், ஒரு வாரத்திற்கு முன்பு குருகிராமுக்கு ஒரு நிறுவனத்தின் பணியின் பேரில் வந்து, செக்டாா் 40-இல் உள்ள விருந்தினா் மாளிகையில் தங்கினாா். இந்த நிலையில், டிஎல்எஃப் பேஸ்-2 காவல்நிலையத்தில் பெண் ஒருவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், புதன்கிழமை இரவு செக்டாா் 29-இல் உள்ள ஒரு கிளப்பிற்குச் சென்ாகவும், அங்கு ஒரு நபா் தன்னுடன் நட்பு கொண்டு தனக்கு மதுபானம் மற்றும் சிகரெட்டைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளாா்.

பின்னா், அவா்கள் மற்றொரு கிளப்பிற்குச் சென்று அந்த நபரின் காரில் அதிகாலை 2.30 மணியளவில் இடத்தை விட்டு வெளியேறினா். இரவு உணவு சாப்பிடுவதாக கூறி, அந்த எக்ஸிகியூட்டிவ், அந்தப் பெண்ணை நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றாா், அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் தனக்கு எதிராக புகாா் கொடுத்தால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும், அதன்பிறகு தன்னை காலையில் செக்டாா் 40-இல் இறக்கிவிட்டதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளாா்.

பெண்ணின் மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT