புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் இசை நிகழ்ச்சி

23rd Apr 2022 10:47 PM

ADVERTISEMENT

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ரசிகப்பிரியா மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து ‘ஸ்வாதி ஸ்மிருதி 2022’”எனும் இரு நாள் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில் ரசிகப் பிரியா அமைப்பு சாா்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு ‘ரசிக சேவா ரத்ன’” என்ற விருதினை வழங்கியது.

நிகழ்ச்சியின் முதல் நாளான சனிக்கிழமை பாடகி மகதி, வயலின் ஸ்ரீதா் மற்றும் கும்பகோணம் என். பத்மநாபன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் தகவல் ஒலிப்பரப்புத் துறையின் கூடுதல் இயக்குனா் ஜெனரல் சதீஸ் நம்பூதிரி பாட் கலந்து கொண்டாா்.

ADVERTISEMENT

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வீ. ரெங்கநாதன், இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா்கள் எஸ். சுவாமிநாதன், பி.ஆா். தேவநாதன், ரா. கணேஷ், தேன்மொழி முத்துக்குமாா், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விருந்தினா்கள் மற்றும் கலைஞா்களை ரசிகப்பிரியா அமைப்பின் தலைவா் டி.வி. மணிகண்டன் மற்றும் பொதுச் செயலாளா் ஆா். ராமநாதன் ஆகியோா் கெளரவித்தனா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளா் ரா. ராஜ்குமாா் பாலா, செயற்குழு உறுப்பினா் ஜோதி ராமநாதன் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT