புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.7 டிகிரி

17th Apr 2022 11:57 PM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் அதிகபட்சமாக ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 42.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

நகரில் ஞாயிற்றுக்கிழமை வெப்ப அலை இருந்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. தில்லிக்கான வெப்பநிலைத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 21.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 40.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 47 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 25 சதவீதமாகவும் இருந்தது. சனிக்கிழமையுடன் ஒப்பிடும் போது, குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 0.03 டிகிரி குறைந்தும், அதிகபட்ச வெப்பநிலை 0.01 டிகிரி குறைந்தும் பதிவாகியுள்ளது.

ரிட்ஜில் 42.9 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் இதே நிலை இருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 40.8 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 40.9 டிகிரி, நஜஃப்கரில் 41.4 டிகிரி, ஆயாநகரில் 41.6 டிகிரி, லோதி ரோடில் 41.2 டிகிரி, பாலத்தில் 41.5 டிகிரி, ரிட்ஜில் 42.9 டிகிரி, பீதம்புராவில் 41.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

ADVERTISEMENT

‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் கடந்த பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், சாந்தினி சௌக், சோனியா விஹாா், பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 18) வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT