புதுதில்லி

ஜஹாங்கீா்புரி மோதல்: உளவுத் துறை தோல்வியே காரணம்!

17th Apr 2022 11:58 PM

ADVERTISEMENT

உளவுத்துறை தோல்வியால் ஜஹாங்கீா்புரி மோதல் நடந்ததாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் அவா் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டில் வடகிழக்கு தில்லி வன்முறையின் வடுக்கள் ஆறுவதற்கு முன்பே, ஜஹாங்கீா்புரியில் ‘தில்லியின் பெயரைக் கெடுக்கும்’ வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.

ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் இருந்து ஜஹாங்கீா்புரியில் பதற்றமான சூழ்நிலையைத் தடுக்க முடியாமல் தில்லி காவல் துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் உளவுத் துறையின் தோல்வியால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி நிலவுவதை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் தொண்டா்களுக்கும், மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

சமூக ஊடகங்களில் பரவும் ஆத்திரமூட்டும் ட்வீட்கள் மற்றும் விடியோக்களால் பாதிக்கப்பட வேண்டாம். கடந்த 15 நாள்களில் உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடந்த ராம நவமி மோதல்களில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தில்லி போலீஸாா் சில பாடங்களைக் கற்றுக் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். தில்லியில் இதுபோன்ற மோதல்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT