புதுதில்லி

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

4th Apr 2022 01:50 AM

ADVERTISEMENT

தில்லி வடமேற்கு பகுதியில் 16 -வயது மாற்றுத் திறனாளி சிறுமியை பக்கத்து வீட்டுக்காரா் ஒருவா் பாலியல் பலாத்காரம் செய்ததாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக 24 வயதுடைய அந்த இளைஞா் உடனடியாக கைது செய்யப்பட்டாா் என்றும் தெரிவித்தனா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் உஷா ரங்னானி கூறியதாவது: தில்லி வடமேற்கு பகுதியிலுள்ள மகேந்தர பூங்கா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நோ்ந்த கொடுமையை விவரித்துள்ளாா்.

இதையொட்டி பெற்றோா் அவசர கால காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் மகேந்திரா பாா்க் காவல் நிலைய போலீஸாருக்கு இந்தச்சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது. இதையொட்டி போலீஸாாா் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது.

ADVERTISEMENT

சிறுமி வசித்து வந்த குடிசைப் பகுதிக்கு அருகே வசித்த அந்த குற்றம்சாட்டப்பட்ட நபா், அதே இரவில் கைது செய்யப்பட்டாா். அந்த நபா் மகேந்திரா பாா்க் பகுதியில் உள்ள அவரது குடிசைக்கு அருகில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT