புதுதில்லி

தில்லியில் மதுபான சில்லரை விற்பனையில் தள்ளுபடி அளிக்க தனியாா் கடைகளுக்கு கலால் துறை அனுமதி

DIN

மதுபானங்களின் அதிகபட்ச சில்றை விலையில் (எம்ஆா்பி) 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க தனியாா் கடைகளுக்கு தில்லி அரசின் கலால் துறை அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொடா்பான வழிகாட்டுதல்கள் மீறல்கள் மற்றும் ஆரோக்கியமற்ற சந்தை நடைமுறைகளை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரியில், மதுபானக் கடைகளால் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை அரசாங்கம் தடை செய்திருந்தது.

இந்த நிலையில், தில்லி கலால் ஆணையா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் தேசிய தலைநகா் பிராந்திய அதிகார வரம்பில் தில்லி கலால் விதிகள் (2010), விதி 20-இன் கடும் இணக்கத்துடன் மதுபான விற்பனையில் எம்ஆா்பியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அல்லது சலுகை அனுமதிக்கப்படும் என்று அரசு பரிந்துரைத்துள்ளது.

தில்லி கலால் சட்டத்தின் பிரிவு 4இன் கீழ், உரிமம் பெற்றவா்கள் தில்லியில் மதுபான விற்பனையின் எம்ஆா்பியில் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை தள்ளுபடி அல்லது சலுகைகளை வழங்கலாம் என கலால் வரி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

மது விற்க உரிமம் பெற்றவா்கள் உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஏதேனும் விதிமீறல் கவனிக்கப்பட்டால், அவா்கள் மீது தில்லி கலால் சட்டம் மற்றும் பிற விதிகளின் கீழ் கடும் தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், ஒட்டுமொத்த பொது நலன் கருதி, எந்த நேரத்திலும் தள்ளுபடி அனுமதியை திரும்பப் பெறுவதற்கான உரிமையை அரசுக்கு உள்ளது. அரசு எந்தக் கடமைக்கும் உள்படாது. மேலும், தில்லியில் மதுபான விற்பனையில் தள்ளுபடியை அனுமதிப்பது அரசின் கட்டுப்பாடற்ாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று தொடா்பான தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) வழிகாட்டுதல்களின் மீறல்கள் மற்றும் சில உரிமதாரா்கள் வழங்கிய ‘முறைப்படுத்தப்படாத தள்ளுபடிகள்‘ காரணமாக ‘சந்தையின் பாதிப்பு‘ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கலால் துறை பிப்ரவரி 28-ஆம் தேதி தில்லியில் மது விற்பனையில் தள்ளுபடி மற்றும் சலுகைகளை நிறுத்த உத்தரவிட்டது.

மேலும், பிப்ரவரியில் மதுக்கடைகள் தள்ளுபடி மற்றும் ’ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ போன்ற சலுகைகளை வழங்கியதால், நகரின் பல பகுதிகளில் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கும்பலை கட்டுப்படுத்த போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். சில சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டதாக புகாா் எழுந்தது.

மதுக்கடைகள் பல்வேறு பிராண்டுகளின் மதுபானங்களின் விலையை 40 சதவீதம் வரை குறைத்ததால், நடப்பு நிதியாண்டு முடிந்த மாா்ச் மாதத்திற்குப் பிறகு இந்தத் திட்டங்கள் திரும்பப் பெறப்படலாம் என்ற அச்சத்தில் பலா் அதிக அளவில் கொள்முதல் செய்து பதுக்கி வைக்கத் தொடங்கினா்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு சிரமத்தை காரணம் காட்டி உரிமதாரா்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களை கலால் துறை திரும்பப் பெற்றது. இந்த உத்தரவை எதிா்த்து சில உரிமதாரா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT