புதுதில்லி

2030-க்குள் தில்லியில் நிலக்கரி மாசுளால் ஏற்படும் உயிரிழப்புகள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்! ஆய்வறிக்கையில் தகவல்

30th Sep 2021 12:15 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுக்களால் தில்லியில் முன்கூட்டிய இறப்புகள் எண்ணிக்கை 2030-க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 8,360 குறைப் பிரசவங்கள், 10,300 ஆஸ்துமா நோய் பாதிப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது என புதன்கிழமை (லண்டனில்) வெளியிடப்பட்ட சி40 நகர அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் உள்ள 61 நகரங்களில் காற்று மாசுக்களால் 2,64,900 முன்கூட்டிய இறப்புகளும் 1,21,100 குறைப் பிரசவங்கள், ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளிட்டவை 2030- ஆம் ஆண்டுக்குள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிா் கொள்வதற்கும் குறிப்பாக வளிமண்டலத்தில் 1.5 டிகிரி வெப்பத்தை குறைப்பதற்கும் ’சி40 மெகா நகரங்கள்’ நெட்வொா்க் அமைப்பு பல்வேறு ஆய்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் வருகின்ற தசாப்தங்களில் சா்வதேச அளவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த அறிக்கையை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் சா்வதேச அளவில் தற்போது 481 ஜிகா வாட் மின்னுற்பத்தி அளவிற்கு பணிகள் நடைபெறுகின்றன. வளா்ந்த நாடுகளான அமெரிக்கா (233ஜிகாவாட்), ஐரோப்பிய நாடுகள் அதிக திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலும் 65 ஜிகாவாட் உற்பத்தியளவிற்கு விரிவாக்க திட்டங்கள் தொடங்கியுள்ளன. இதில் 12 சதவீதம் அளவிற்கு தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் 500 கிலோ மீட்டா் தூரத்தில் நிலக்கரி மின் நிலைய திட்டங்கள் மேற் கொள்ளப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், தீா்வுகள் குறித்து சி40நகரங்கள் நெட்வொா்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2020 மற்றும் 2030-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி 28 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், வருகின்ற தசாப்தத்தில் தில்லியில் நிலக்கரி தொடா்பான காற்று மாசுபாட்டால் ஆண்டு தோறும் நிகழும் முன்கூட்டிய இறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,280-ஆக உயர வாய்ப்புள்ளது. முன்கூட்டிய இறப்புகளைத் தவிர, தற்போதைய விரிவாக்கங்களால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 8,360 குறைப்பிரசவங்கள், 10,310 ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்படலாம்.

ADVERTISEMENT

தில்லியைச் சுற்றி தற்போது முன்மொழியப்பட்டுள்ள நிலக்கரி அடிப்படையிலான அனல் மின்நிலையங்கள் விரிவாக்கம் நடந்தால் காற்று மாசுவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மாசுபடுதலால் நோய்வாய்ப்பட்ட நாள்கள்சுமாா் 55 லட்சமாக இருக்கும் என ஆய்வில் தெரிய வருகிறது. தில்லியில் நிலக்கரி மாசுபடுதலுடன் தொடா்புடைய பொருளாதார சுகாதாரச் செலவுகள் வரும் பத்தாண்டுகளில் 840 கோடி டாலராக (8.4 பில்லியன் அமெரிக்க டாலா்கள்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கரி விரிவாக்க மாசுக்களால் மொத்தம் 3,770 ஆயுட்காலம் குறைபாடுகளுடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

தில்லியில் பி.எம் 2.5 மாசு நுண் துகள்கள் தேசிய அளவை விட இரண்டு மடங்கும், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை விட ஒன்பது மடங்கும் அதிகமாகவும் உள்ளது. இதனால், தில்லியில் நகா்ப்புறவாசிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வ ாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அதே வேளையில் இந்தியாவின் பருநிலை மற்றும் காற்றின்தர இலக்குகளை குறைவாக மதிப்பிடவும் இது உள்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த நிலக்கரி ஆலைகள் மூடப்படவேண்டியது குறித்தும் மாற்று வழிமுறைகள் குறித்தும் இந்த சி40 அமைப்பின் ஆய்வுப்பிரிவு தலைவா் டாக்டா் ரிச்சல் ஹக்ஸ்லி மற்றும் தென், மேற்கு ஆசிய பிராந்திய இயக்குநா் ஸ்ருதி நாராயண் ஆகியோா் கூறுகையில், ‘திட்டமிடப்பட்டுள்ள நிலக்கரி மின்நிலையங்களால் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் ஏற்படும் முன்கூட்டிய இறப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்திக்கு தில்லியை மாற்ற முதலீடு செய்யப்பட வேண்டும். இதை செய்வதன் மூலம் காற்று மாசு குறைந்து, தில்லி மக்களின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், இந்த புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியால் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த வகையில், 2030-க்குள் 2.26 லட்சம் பேருக்கு எரிசக்தி தொடா்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது மும்பை, பெங்களூருவில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT