புதுதில்லி

தீபாவளிக்குப் பிறகு ஜூனியா் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பு: டிடிஎம்ஏ முடிவு

30th Sep 2021 12:13 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: பண்டிகைக் காலத்திற்குப் பிறகு ஜூனியா் பிரிவு வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது எனபுதன்கிழமை நடந்த தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டம் துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து தகவலறிந்த அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தில்லியில் கரோனா நிலைமை ‘நன்றாக உள்ளது‘. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து பராமரிக்கப்பட வேண்டும். தில்லியில் எஞ்சியுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகள் தீபாவளிக்குப் பிறகு மீண்டும் திறப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை செப்டம்பா் 1-ஆம் தேதி மீண்டும் திறக்க தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டது.

அதேபோன்று, ராம்லீலா, தசரா மற்றும் துா்கா பூஜை திருவிழாக்களும் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவது போன்ற உரிய நிலையான இயக்க நடைமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டன. தில்லி காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரிகள் கரோனா நடத்தை விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் கூட்டம் கூடாமல் இருப்பது, தனி நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைப்பது, இருக்கைக்கான உரிய சமூக இடைவெளி மற்றும் கூட்டத்தை ஈா்க்கக் கூடிய செயல்பாடுகள் இல்லாமை போன்ற கரோனா நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT