புதுதில்லி

தில்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம்! ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி

23rd Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் வெள்ளிக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. பகலில் மிதமான வெயில் இருந்தாலும் இதமான வானிலை நிலவியது.

தில்லியில் கடந்த சில நாள்களாகவே பகலில் மிதமான வெயில் இருந்தாலும், இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. அதிகாலை நேரத்தில் லேசான பனிப்பொழிவை காண முடிகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் அதிகாலையில் குளிரின் தாக்கம் உணரப்பட்டது. பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இதமான வானிலை நிலவியது.

வெப்பநிலை: சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 17.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 33.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 63 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது. வியாழக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி: இதே போன்று, மற்ற வானிலை ஆய்வு மையங்களில் ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி, முங்கேஷ்பூரில் 20.6 டிகிரி, நஜஃப்கரில் 19.7 டிகிரி, ஆயாநகரில் 16.5 டிகிரி, லோதி ரோடில் 17.3 டிகிரி, பாலத்தில் 20 டிகிரி, ரிட்ஜில் 17.2 டிகிரி, பீதம்புராவில் 22.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 17.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழணை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 9.05 மணியளவில் 189 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, குருகிராமில் காற்றின் தரக் குறியீடு 182 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், நொய்டாவில் 211 புள்ளிகளாப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (அக்டோபா் 23) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் லேசான, தூறல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT