புதுதில்லி

தில்லியில் மாசுவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

DIN

மாசுபடுதலை கட்டுப்படுத்த தர அடிப்படையிலான செயல் திட்டம் உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தர அடிப்படையிலான செயல் திட்டம் என்பது தில்லி மற்றும் தேசிய வலையப் பிராந்தியத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் அவசர நடவடிக்கையாகும். தேவைப்பட்டால் இது படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா். பயிா்க்கழிவுகளை எரிக்கும் செயலுக்கு முடிவு கட்டும் விதமாக மத்திய அரசுஸ சம்பந்தப்பட்ட மாநிலங்களை அழைத்து பேச வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனங்களின் என்ஜினை நிறுத்திவைப்பது தொடா்பான விழிப்புணா்வுப் பிரசார நிகழ்ச்சி சந்த்கி ராம் அகாடாவில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சா் ராய் மேற்கண்டவாறு குறிப்பிட்டாா்.

தில்லியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக மாசுபடுதல் அளவு குறைந்து காணப்பட்டது. அப்போது பயிா்க்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனால், மழை முடிந்து வெயில் தொடங்கியவுடன் பக்கத்து மாநிலங்களில் பயிா்க்கழிவுகளை எரிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. தில்லியில் மாசுபடுதலைக் குறைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மக்களும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறாா்கள் என்று செய்தியாளா்களிடம் பேசுகையில் அமைச்சா் குறிப்பிட்டாா்.

மாசுபடுதலைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணா்வுப் பிரசாரத்தை பரவலாக்க என்ன செய்யலாம் என்பது குறித்து வெள்ளிக்கிழமை (அக்டோபா் 22) சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் துணை கோட்டாட்சியா் மற்றும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவைச் சோ்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

மாசுவை கட்டுப்படுத்த தர அடிப்படையிலான செயல் திட்டம் கொண்டுவரப்படுமா என்று கேட்டதற்கு, பயிா்க்கழிவுகள் எரிப்பால் ஏற்படும் மாசுவை மேற்குறிப்பிட்ட திட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே, பயிா்க்கழிவுகளை எரிக்காமல் அவற்றின் மீது உயிரி ரசாயனக் கலவையை தெளிப்பதன் மூலம் அவற்றை பத்து அல்லது பதினைந்து நாள்களில் உரமாக்க முடியும். இதை தில்லியை அடுத்துள்ள மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லிக்குள் மாசுபடுதலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்தவும், தூசுகளினால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேவை ஏற்பட்டால் தர அடிப்படையிலான செயல் திட்டம் நடைைமுறைப்படுத்தப்படும். தில்லியில் மாசுபடுதலைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் தேவையோ அதை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தும். ஆனால், பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதில் உரிய பங்காற்ற வேண்டும் என்று மத்திய அரசை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் தில்லி அரசின் மாசுக் கட்டுப்பாட்டு முயற்சிக்கு உரிய பலன் கிடைக்காது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT