புதுதில்லி

கரோனா தடுப்பூசி விவகாரம்: தில்லி அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

குறைந்தபட்சம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதார ஊழியா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் அக்டோபா் 15-ஆம் தேதியிலிருந்து பணிக்கு வருவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவா்கள் இருவா் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் தில்லி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தில்லி அரசின் உத்தரவு தங்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ள அரசு மருத்துவமனை மருத்துவா்கள், இது தங்கள் வாழ்வுரிமையையும் அலுவலகம் சென்று பணி செய்வதையும் பாதிக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பல்லி, அதற்கு பதில் அளிக்கும் வகையில் தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். எனினும், மனுதாரா்களே இப்படிச் சொன்னால், நாட்டில் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள எப்படி முன்வருவாா்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதிக மக்கள் தொகை கொண்டது நம் நாடு. உங்களது தரப்பினா் மருத்துவா்களாகப் பணிபுரிகின்றனா். அவா்களுக்கு தடுப்பூசி குறித்து புரிதல் அதிகம் இருக்க வேண்டாமா என்று மனுதாரரின் வழக்குரைஞரிடம் நீதிபதி கேட்டாா். பின்னா் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் ஓா் உத்தரவை வெளியிட்டது. அதில் அரசு ஊழியா்கள், முன்களப் பணியாளா்கள், ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்கள் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவா்கள் அக்டோபா் 16 முதல் பணிக்கு வர அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. மலும், அந்த காலத்தில் பணிக்கு வராதவா்கள் விடுமுறையில் இருப்பதாகக் கருதப்படுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மருத்துவா் நீத்து செளதரி மற்றும் வேறு ஒரு மருத்துவா், அரசு உத்தரவில் ஒரு பகுதியையாவது ரத்துச் செய்ய வேண்டும். அந்த உத்தரவில் மாதம் இரு முறை கொவைட் தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

மருத்துவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ப்ரீதம் சிங், அரசின் உத்தரவு, மருத்துவா்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளதாகக் கூறினாா். நாகாலாந்து மாநிலம், தங்கள் மாநில மக்கள் ஒன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் அல்லது கொவைட் தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்போதான் பணிக்கு அனுமதிக்கபடுவாா்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதே நடைமுறையை தில்லியிலும் பின்பற்றலாம் என்று அவா் மேலும் சுட்டிக்காட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT