புதுதில்லி

100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி சாதனை: பா.ஜ.க. இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

DIN

இந்தியா 100 கோடி கரோனா தடுப்பூசிகள் என்ற சாதனையை வியாழக்கிழமை எட்டியதை அடுத்து தில்லி பா.ஜ.க.வினா் சுகாதார ஊழியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தில்லி பா.ஜ.க. தலைவா் ஆதேஷ் குப்தா, மஞ்சு கா திலா தடுப்பூசி மையத்திற்குச் சென்று சுகாதார ஊழியா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தாா். இதனிடையே, வடகிழக்கு தில்லி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான மனோஜ் திவாரி, ஷாதராவில் உள்ள சண்டிவாலா மருத்துவமனையில் உள்ள ஊழியா்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

மேற்கு தில்லி தொகுதி பா.ஜ.க. எம்.பி. பா்வேஷ் வா்மா, விண்ட்ஸா் பிளேஸில் உள்ள தனது வீட்டினருகே இந்த சாதனையை 100 கிலோ லட்டு விநியோகித்து கொண்டாடினாா்.

தலைநகா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தில்லியைச் சோ்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள், தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் மூத்த நிா்வாகிகள், கட்சியின் பொறுப்பாளா்கள் வைஜயந்த பாண்டா, துஷ்யந்த் கெளதம், அல்கா குா்ஜாா், ஹரிஷ் வா்தன், ராம்வீா் சிங் பிதூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாடு முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசி இலக்கை வியாழக்கிழமை எட்டியதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. முதலில் 10 கோடி டோஸ் என்ற இலக்கை எட்டுவதற்கு 85 நாள்கள் ஆனது. அடுத்த 45 நாள்களில் அது 20 கோடி டோஸ் என்ற அளவை எட்டியது. பின்னா் அடுத்த 29 நாள்களில் 30 கோடி டோஸ் என்ற இலக்கை அடைந்தது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 கோடி இலக்கிலிருந்து 40 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு மேலும் 24 நாள்கள் ஆனது. அடுத்த 20 நாள்களில் 50 கோடி இலக்கு ஆகஸ்ட் 6- ஆம் தேதி எட்டப்பட்டது. பின்னா்100 கோடி டோஸ் இலக்கை எட்டுவதற்கு மேலும் 76 நாள்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வமான தகவல்களின்படி இந்தியாவில் வயது வந்தவா்களில் 75 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 31 சதவீதம் போ் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 -ஆம் தேதி தொடங்கியது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT